தமிழில், 'சென்னையில் ஒருநாள்', 'உத்தமவில்லன்', 'மரியான்' படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தனக்குப் பிடித்த வேடங்களில் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையில் பார்வதி உறுதியாக இருக்கிறார். இப்போது பார்வதி என்ற பெயரில் மேலும் ஒரு நடிகை நடிக்க வந்திருக்கிறார்.
இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இவரைப் பார்வதிமேனன் என்றும் புதிய நடிகையை பார்வதி நாயர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இதற்கு முதலில் நடிக்க வந்த பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். "நான் எப்போதுமே சாதி அடையாளத்தை விரும்புவதில்லை. ஆனால் திடீரென என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. எனது பெயருக்குப் பின்னால் மேனன் என்கிற சாதிப் பெயரை போடுகிறார்கள். அது எனக்கு வேண்டாம். "தயவு செய்து என்னைப் பார்வதி மேனன் என்று அழைக்காதீர்கள்.
அப்படி அழைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதைச் செய்கிறேன். எனது நிஜமான பெயரிலேயே நான் அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார் பார்வதி.