திமுக, அதிமுக தலைவர்களை விமர்சிக்கவில்லை: திருமா விளக்கம்

மதுரை: திமுக, அதிமுக தலைவர் களை தனிப்பட்ட முறையில் விமர் சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், மக்கள் நல கூட்டணி மாநாடு அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். "மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் நான் பேசும்போது சில ஊழல்களை குறிப்பிட்டிருந்தேன். அது திமுக தலைவரையோ, அதி முக பொதுச்செயலரையோ விமர் சித்து தனிப்பட்ட முறையில் பேசியதல்ல. அவ்வாறு நான் விமர்சித்துள்ளதாக அந்தந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கருதி இருந்தால் அதற்கு நான் வருத் தம் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் திருமாவளவன்.

தமாகா, தேமுதிக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்கள் நலக் கூட்டணி அழைப்பு விடுத்திருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், பேரவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் அக்கட்சிகள் முடிவெ டுக்க நேரம் உள்ளது என்றார். "இரு கட்சிகளும் எங்களது மக்கள் நல கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்க ஜனநாயகக் கட்சிகள் கைகோர்க்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்திருக்கிறோம். "மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபடியே எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் சந்திக்கும்," என் றார் திருமாவளவன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!