உடல் எடையைக் குறைக்கும் ‘ஃபிளேவனாய்டு’உணவுகள்

உடல் எடையைக் குறைக்க விரும்­­­பு­­­வோர் ஆப்பிள், பேரிக்­­­காய், பெர்ரி வகைப் பழங்களை அதி­­­க­­­மாக அருந்த வேண்டும் என்று அண்மைய ஆய்வு முடி­­­வு­­­கள் தெரி­­­விக்­­­கின்றன. 'ஃபி­ளேவனாய்டு' அதி­­­க­­­மாக இருக்­­­கும் பழங்கள், காய்­­­க­­றிகள் உடல் எடை கூடு­­­வதைத் தடுக்க வல்லவை. அமெரிக்காவில் 24 ஆண்டு காலத்­­­தில் 124,086 பேரிடம் நடத்­­­தப்­­­பட்ட ஆய்வில் பழ, காய்கறி வகை­­­களில் இருக்­­­கக் கூடிய ஏழு வகை 'ஃபி­ளேவனாய்டு'கள் எவ்வாறு எடை அதி­­­க­­­ரிக்­­­கா­­­மல் இருப்­­­ப­­­தற்கு உதவும் என்று கண்ட­­­றி­­­யப்­­­பட்­­­டது.

ஏழு வகை 'ஃபி­ளேவ னாய்டு'கள் இருக்­­­கும் பழ, காய் கறி வகைகளை உட்­­­கொள்­­­ப­­­வர் களின் எடை அதி­­­க­­­ரிப்­­­ப­­­தில்லை; அல்லது மெதுவாகத்தான் எடை அதி­­­க­­­ரிக்­­­கும் என்று ஆய்வு முடி­­­வு­­­கள் சுட்டின. ப்ளூ­­­பெர்ரி, ஸ்ட்­­­ரா­­­பெர்ரி, தேநீர், ஆப்பிள், ஆரஞ்­­­சுப் பழச் சாறு, வெங்கா­­­யம் போன்ற­­­வற்­­­றில் 'ஃபி­ளேவனாய்டு'கள் அதிகம் உள்ளன. சிறி­­­ய­­­ள­­­வில் உடல் எடை குறைந்தா­­­லும் நீரிழிவு, புற்­­­று­ நோய், ரத்­­­தக்­­­கொ­­­திப்பு, இதய நோய் போன்றவை வரக்­­­கூ­­­டிய அபா­யத்தைத் தவிர்க்­­­க­­­லாம். ஆகவே, இதுவரை இருந்து வந்த உடற்­­­ப­­­ரு­­­மன், அதனால் ஏற்­­­படும் ஆரோக்­­­கி­­­யப் பிரச்­­­சினை­கள் சார்ந்த அணு­­­கு­­­முறை­களை அடுத்த கட்­­­டத்­­­துக்­­­குக் கொண்டு போக இந்தக் கண்­­­டு­­­பி­­­டிப்பு உதவும் என்று தெரி­­­விக்­­­கப் ­பட்­­­டது.

இரண்டு கோப்பை­கள் நிறைய பழங்களையும் இரண்டரைக் கோப்பை­கள் நிறைய காய்கறி களையும் நாம் அன்றா­டம் உட்­­­கொள்ள வேண்டும் அந்த ஆய்வுக் குழு­­­வி­­­னர் பரிந்­­­து உரைத்­­­த­­­னர். காய், கனி வகைகள் சமைக்கப்படும்போது நாம் அவற்றில் இருக்கும் ஃபி­ளேவ னாய்டு நுண்சத்துகளை இழக்க நேரிடும். அது மட்டுமின்றி, காய், கனிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தாலும் அதே போல ஃபி­ளேவனாய்டு அதன் இயல்பை இழக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!