கருணைக் கொலை செய்ய மனுவுடன் வந்த பெண்

சென்னை: தன்னைக் கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள் என்று கோரிக்கை விடுக்கும் மனுவுடன் வந்த பெண்ணால் சென்னை அரசு மருத்துவமனை யில் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி. இவர் புதன் கிழமையன்று சென்னை அரசு மருத்துவமனைக்கு மனுவுடன் வந்தார். எனினும் அங்கிருந்த காவல்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து செய்தியாளர்க ளிடம் பேசிய கலைச்செல்வி, கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் முழு மதுவிலக்கு வேண்டி தமிழக பெண்கள் போராடி வந்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை என்றும் இதற்குத் தமிழக அரசே காரணம் என்றும் கூறினார். "நாங்கள் காந்திய வழியில் போராடி வருகிறோம்.

"மதுவால் பல குடும்பப் பெண் கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டு வருகின் றனர். "இந்நிலை மாற முழு மது விலக்கு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் என்னை மது விலக்கிற்காக கருணைக் கொலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அதன் படி என்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு அரசு மருத்துவமனையில் மனு கொடுக்க வந்தேன். "ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டனர்," என்றார் கலைச்செல்வி. இதனால் அங்கு பரபரப்பு நில வியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!