டௌன்டவுன் ரயில் பாதை கட்டண முறை விளக்கம்

தமிழவேல்

கழிவுக் கட்டணங்களைக் கணக் கிடுவதற்காகப் பொதுப் போக்கு வரத்து மன்றம் பயன்படுத்தும் கட்டணக் கணக்கீட்டு முறையா லேயே டௌன்டவுன் 2 ரயில் பாதையின் சில நிலையங்களுக் கிடையே பயணிக்கும் பொது மக்களின் கட்டணம் அதிகமாக உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். டௌன்டவுன் 2 ரயில் பாதை கட்டப்படுவதற்கு முன்பு புக்கிட் பாஞ்சாங்கிலிருந்து நியூட்டன் அல்லது பூகிஸ் நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் வடக்கு= தென்கிழக்கு=மேற்கு ரயில் பாதை களைப் பயன்படுத்தவேண்டும்.

புதிய டௌன்டவுன் 2 ரயில் பாதைக்கான கட்டணக் கணக் கீட்டு முறைப்படி பெரியவர்களின் கட்டணம் குறைவாக இருக்கும் என்றாலும் பொதுப் போக்குவரத்து மன்றம் பழைய வடக்கு= தென்கிழக்கு=மேற்கு ரயில் பாதைக்கான கட்டண முறையைத் தற்போது பயன்படுத்துகிறது. ஏனெனில், டௌன்டவுன் 2 ரயில் பாதைக்கான கட்டண முறையில் முதியவர்களும் உடற் குறையுள்ளோரும் முன்பைவிட அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறினார் திரு கோ. ஹாலந்து=புக்கிட் திமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியாங் எங் வா கேட்ட கேள்விக்கு அமைச்சர் கோ பதிலளித்தார்.

டௌன்டவுன் 2 ரயில் பாதை போன்ற குளிர்சாதன வசதிகள் கொண்ட, முழுமையாக சுரங்கப்பாதையில் செல்லும் ரயில் பாதைகளுக்கு அதிக நிர்வாகச் செலவுகள் இருக்கும் என்பதால் கட்டணம் மாறுபடுகிறது. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!