பூங்காக்களில் சைக்கிள் வேகக் கட்டுப்பாடு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பூங்காக்களிலும் பூங்கா இணைப்பு களிலும் சைக்கிள் வேகக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகப் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜோசஃப்பின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கை இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்க்கப்படு வதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால் தலைமை யின்கீழ் இயங்கும் 'எக்டிஃப் மொபிலிட்டி' ஆலோசனைக் குழு அறிக்கையை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. சொந்த சாதனங்களைப் பயன்படுத்திப் பயணம் செய்பவர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறை களும் அறிக்கையில் குறிப்பிடப் படும்.

பாதசாரிகளுடன் சைக்கி ளோட்டிகள் பகிர்ந்துகொள்ளும் பாதைகள் குறித்து நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு திருமதி டியோ பதிலளித்தார். அண்மையில் சிராங்கூன் பூங்கா இணைப்பில் சைக்கி ளோட்டி ஒருவரால் மோதப்பட்டு காயம் அடைந்த 3 வயது கேஸ்லின் டான் பற்றி திருமதி டியோ பேசினார். "கேஸ்லின் டியோவின் பெற் றோர் மிகவும் முதிர்ச்சியான முறையில் அந்தப் பிரச்சினையைக் கையாண்டனர். காயம் அடைந்த தமது மகனைப் படம் எடுத்து அதைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தபோதிலும் மகனின் காயத்துக்குக் காரண மான சைக்கிளோட்டியைத் தூற்று வது அவர்களது நோக்கமில்லை என்பதை அவர்கள் தெளிவுப் படுத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!