கோலாலம்பூர்: கெடா மாநில அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று கெடா அரசமன்றத் தலைவரை சந்தித்துப் பேசியிருக் கிறார். இச்சந்திப்பின் போது, கெடா மாநிலத்தின் புதிய முதலமைச்சர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்களை திரு நஜிப் பரிந்துரை செய்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும் கெடா மாநில புதிய முதலமைச்சராக நியமிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கெடா அம்னோ துணைத் தலைவர் அகமது பாஷாவின் பெயர் பிரதமர் பரிந்துரைத்துள்ள அந்த மூன்று பேரில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
குவார் செம்பிடாக் சட்டமன்ற உறுப்பினர் கு அப்துல் ரஹ்மான் கு இஸ்மாயில், ஆயர் ஹங்காட் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ராவி அப்துல் ஹமிட், பாயு சட்டமன்ற உறுப்பினர் அஸ்மி சி ஹுசின் ஆகியோரே கெடா முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மூவர் என்று தெரிகிறது. மூவரின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை திரு நஜிப் நேற்று கெடா அரசமன்றத் தலைவர் சலிஹுதின் சுல்தான் பட்லிஷா விடம் கொடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன என்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட் டுள்ளது.
கெடா முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் இதனால் அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கக் கோரியும் அம்மாநில அம்னோ தலைவர்கள், பிரதமரிடம் வேண்டு கோள் விடுத்தனர்.