இரு துப்பாக்கிகளும் வெடிமருந்தும் வைத்திருந்த ஒருவர் பாரிஸில் கைது

பாரிஸ்: பிரான்சின் தலைநகர் பாரிஸில் டிஸ்னிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் இரு துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற ஒருவரை பிரெஞ்சு போலிசார் கைது செய்துள்ளனர். சுமார் 28 வயதான அந்த ஆடவரிடம் திருக்குர்=ஆன் பிரதியும் வெடிபொருளும் இருந்த தாக போலிசார் கூறினர்.

அங்குள்ள நியூயார்க் ஹோட் டலுக்குள் வியாழக்கிழமை அவர் நுழைய முயன்றபோது உலோக கண்டுபிடிப்பு கருவிகள் மூலம் அவர் பைக்குள் துப்பாக்கிகள் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆடவரின் காதலியை போலிசார் பின்னர் கைது செய்தனர். பாரிஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரெஞ்சு போலிசார் விழிப்பு நிலையில் இருந்து வருகின்றனர்.

டிஸ்னிலேண்ட் பகுதியில் நியூயார்க் ஹோட்டலுக்கு அருகே பிரெஞ்சு போலிசார் குவிந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆடவர், அவரது பாதுகாப்புக்காக அந்த துப்பாக்கிகளை எடுத்து வந்ததாகக் கூறியதாக போலிசார் தெரிவித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!