‘கட்டுவிரியன்’, ‘கண்ணாடி விரியன்’ என்று கூறியதற்காக திருமா வருத்தம்

மதுரை: 'கட்டுவிரியன்', 'கண் ணாடிவிரியன்' என்று பேசியதற் காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த மக்கள் நலக் கூட்டணியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசிய திருமா வளவன், அதிமுகவையும் திமுக வையும் 'கட்டுவிரியன்', 'கண் ணாடி விரியன்' பாம்புகளுடன் ஒப்பிட்டுப் பேசினார். மதுரை மாநாட்டில் திருமா வளவன் காரசாரமாக தனது பேச்சைத் துவக்கினார்.

அதன் ஒரு பகுதியாக, "தமிழகத்தில் அரசியல் என்ற பாம்புப் புற்றுக்குள் கட்டுவிரியன், அதற்கு மாற்றாக கண்ணாடி விரியன்தான் உள்ளது. இரண்டும் கொடிய நச்சு கொண்டவை. புற்றையே அழித்து அங்கு கோயில் கட்ட வேண்டும்," என்று விமர்சித்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதுரையில் அவர் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். "தமிழகத்தில் மாற்று அரசியல் தேவை என்பதற்காக மதுரை மாநாட்டில், இரண்டு பிரதான கட்சிகளைச் சில உவமைகளைக் கூறி விமர்சித்தேன். அந்த விமர் சனம் தனிநபர் தாக்குதல் போல் பிரச்சினையாகிவிட்டது. அது அதிமுக, திமுக தொண்டர்களி டையே சங்கடத்தை ஏற்படுத்தியது. திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தலைவர்களை அல்ல," என்று திருமா தமது பேச்சுக்கு விளக்கம் அளித் தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!