தமிழ் பேசத் தெரியவில்லையே என வருந்தும் ரம்யா நம்பீசன்

கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நடிப்பதற்காக வாய்ப்புத் தேடி தமிழ் நாடு வரும் நடிகர், நடிகைகள் ஓரிரு படங்களிலேயே தமிழ் பேசக் கற்றுக்கொள்வார்கள். மலையாள வாடையுடன் பேசினாலும் அவர்களால் பிழைத்துக்கொள்ள முடியும். கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழில் டப்பிங் பேசும் அளவிற்குக் கூட ஒரு சிலர் வளர்ந்துள்ளனர். ஆனால் தமிழகத்திற்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலான ரம்யா நம்பீசன் மட்டும் தமிழில் பேசப் பயப்படுகிறாராம். 'ராமன் தேடிய சீதை' படத்தில் தமிழுக்கு வந்தவர் ரம்யா நம்பீசன். அதன்பிறகு 'ஆட்ட நாயகன்', 'இளைஞன்', 'குள்ள நரிக்கூட்டம்', 'பீட்சா', 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' எனப் பல படங்களில் நாயகியாக நடித்தார்.

அதோடு 'பாண்டிய நாடு' படத்தில் பைப் பை பை என்ற பாடலைப் பின்னணி பாடியவர் தற்போது மேலும் பல படங்களுக்குப் பாடி வருகிறார். தற்போது 'பீட்சா' படத்திற்குப்பிறகு மீண்டும் விஜயசேதுபதியுடன் 'சேதுபதி' படத்தில் அவருக்கு இணையாக நடித்துள்ளார். ஆக தமிழ்ப் படங்களில் ரம்யா நம்பீசன் நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகி விட்டது. ஆனபோதும் இன்னமும் அவருக்குச் சரிவர தமிழ்ப் பேசத் தெரியவில்லை. பேசுகிறாராம். இந்நிலையில் மலையாள நடிகைகள் சில படங்களில் நடித்ததுமே அழகாக தமிழில் பேசுவதை கோலிவுட் வட்டார நண்பர்கள் சுட்டிக்காட்டி யதை அடுத்து, நம்மால் மட்டும் ஏன் இவ்வளவு நாளாகியும் தமிழில் பேச முடியவில்லை என அவருக்கு வருத்தமாம். அதனால் தீவிரமாக தமிழ்ப் பேச பயிற்சி எடுத்துக் கொண் டிருக்கிறார் ரம்யா நம்பீசன்.

அதோடு இன்னும் சில படங்களுக்குப் பிறகு தமிழில் டப்பிங் பேசவும் முடிவு செய் திருக்கிறாராம் அவர். தமிழ் நாட்டில் படித்து தமிழில் நன்கு உரையாடும் திறமை வாய்ந்த தமிழ் நடிகர், நடிகையர் திரைப்பட வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டுதான் இருக் கின்றனர். ஆனால் அவர்களை யெல்லாம் ஓரம் கட்டிவிட்டு பக்கத்து மாநிலங்கள் அல்லது வட இந்திய நடிகர், நடிகை களையே தேடி அலைகின்றனர் நம்ம ஊரு முன்னணி இயக் குநர்களும் நாயகர்களும். தமிழ்ப் பேசத் தெரியாமல் தமிழ்ப் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகையர் பலர் தமிழ் பேசத் தெரியாததை ஒரு பெரிய விஷயமாகக் கருதிக் கொள் வதில்லையாம். ஏனெனில் மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் அவர்கள் வாசல் கதவைத் தட்டும் என்ற நம் பிக்கை அவர்களிடம் இருக்கிறதாம். இனி நம்ம இயக்குநர்கள், தமிழ்ப் படத்திற்குப் பாட்டெழுத தமிழ் தெரியாதவர்களை அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!