பழிதீர்த்த இந்திய அணி

மெல்பர்ன்: ஒருநாள் போட்டித் தொடரை 1-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 2-0 என வென்று பழிதீர்த்துக் கொண்டது. அடிலெய்டில் நடந்த முதல் டி20 போட்டியில் வென்ற டோனி தலைமையிலான இந்திய அணி நேற்று 2வது ஆட்டத்திலும் 27 ஓட்டங்களில் ஆஸ்திரேலியாவை மண்கவ்வச் செய்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வென்ற முதல் இருதரப்புத் தொடர் இதுதான்.

ஆஸி. அணியில் ஐந்து மாற் றங்கள். ஷான் மார்ஷ், மேக்ஸ் வெல், ஆண்ட்ரூ டை, ஸ்காட் போலண்ட், நேதன் லயன் ஆகியோருக்கு வாய்ப்பு கிட்டியது. இந்திய அணியில் மாற்றமில்லை. நாணய சுழற்சியில் வென்ற ஆஸி. அணித் தலைவர் ஆரோன் ஃபின்ச் முதலில் இந்திய அணி யைப் பந்தடிக்கப் பணித்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் கள மிறங்கிய ரோகித் சர்மாவும் ‌ஷிகர் தவானும் இணைந்து முதல் மூன்று ஓவர்களில் 12 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தனர். ஆயினும், 4வது ஓவரில் இருந்து அவர்கள் விளாசத் தொடங்கினர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 97 ஓட்டங்களை எடுத்தனர். 32 பந்துகளில் 42 ஓட்டங்களை எடுத்து தவான் ஆட்டமிழந்தார்.

கடந்த மூன்று வாரங்களாக ஆஸ்திரேலிய அணிக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வரும் ரோகித் சர்மா நேற்றும் 60 ஓட்டங்களை விளாசினார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!