தொழிற்சாலை தீயை அணைக்க பெரும் படை திரண்டது

தோ பாயோ தொழிற்பேட்டையில் நேற்றுக் காலை தீ மூண்டது. பெரிய அளவில் தீப்பற்றி எரிந்த தால் அதனை அணைக்க 60 பேர் கொண்ட தீயணைப்பாளர் படை திரண்டது. இரண்டு மாடி தொழிற்சாலை களில் திடீரென பற்றிய தீ மள மளவென்று பரவியது. தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் ஏழு இயந்திரங் களோடு ஆளில்லாத தீயணைப்பு இயந்திரம் ஒன்றும் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பாளர்கள் பெருமுயற்சி களை மேற்கொண்டனர் அத்தகைய முயற்சிகள் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பக்கத்தில் விவரிக்கப்பட்டு இருந் தது.

அதிகாலை நேரத்தில் பற்றத் தொடங்கிய தீ, சலவைப் பொருட் களிலும் காகிதத் தயாரிப்புகளிலும் பற்றி எரிந்தது. தீச் சம்பவம் குறித்து தனக்கு அதிகாலை 2.25 மணிக்குத் தக வல் கிடைத்ததாகக் குறிப்பிட்ட குடிமை தற்காப்புப் படை, உடனடி யாக பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு, உதவி வாகனங்களை அனுப்பி வைத்ததாகத் தெரி வித்தது. பக்கத்து கட்டடங்களுக்குத் தீ பரவிவிடாமல் தடுக்கும் நோக்கில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாக னங்கள் ஐந்து அனுப்பப்பட்டன. கிட்டத்தட்ட 90 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தாகவும் காலை 6.30 மணியளவில் தீயணைக்கும் பணி முடிவுற்றபோது யாருக்கும் காயமில்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறி யது. தீப்பற்றியதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதிகாலையில் பற்றத் தொடங்கி நீண்ட நேரம் எரிந்த தீ. படம்: ‌ஷின்மின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!