உறக்கம் கெடுக்கும் சமூக ஊடகங்கள்

அடிக்கடி தங்களது சமூக ஊடகப் பக்கங்களைப் புரட்டும் இளையர்கள் மற்றவர்களைவிட தூக்கம் சார்ந்த பிரச் சினைகளால் பாதிக்கப்பட மூன்று மடங்கு வாய்ப்பு அதிகம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. "சமூக ஊடகங்களில் செலவிடும் ஒட்டுமொத்த நேரத்தைவிட, எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை ஒருவர் அவற்றை நாடுகிறார் என்பதன் மூலம் அவருக்குத் தூக்கமின்மை பிரச்ச்சினை உள்ளதா இல்லையா என்பதை அனுமானித்து விடலாம்," என்று விவரித்தார் திருவாட்டி லெவன்சன்.

இதனால், தூக்கமின்மையால் தவித்து வரும் இளையர் ஒருவர் அதற்குச் சிகிச்சை வேண்டி மருத்துவரை நாடினால் அவருக்குச் சிகிச்சையைத் தொடங்குமுன் அவரது சமூக ஊடகப் பழக்கம் குறித்து அந்த மருத்துவர் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தூக்கம் வராமல் தவிக்கும் போது நேரத்தைக் கடத்த அல்லது தூக்கம் வரும் வரை மீண்டும் சமூக ஊடகங்களை இளையர்கள் நாடலாம். "இந்த இரு அனுமானங்களும் உண் மையாக இருக்கலாம். தூக்கமின்மை, இன்னும் அதிகமாக சமூக ஊடகங் களை நாடச் செய்யலாம். அது தூக்கம் சார்ந்த பிரச்சினைகளை இன்னும் மோச மடையச் செய்யும்," என்று மேலும் எச்சரித்தார் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் ஊடக, தொழில்நுட்ப, சுகா தார ஆய்வுப் பிரிவு இயக்குநரும் மூத்த ஆய்வாளருமான பிரையன் பிரிமேக்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!