சிக்கனமாக செலவு செய்ய அமைச்சர்களுக்கு நஜிப் ஆலோசனை

கோலாலம்பூர்: உலகப் பொருளியல் நலிவடைந்திருப்பதாலும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாலும் அமைச்சுகள் சிக்கனமாக செலவு செய்வதை அமைச்சர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். திட்டங்களை செயல்படுத்தும்போது தேவையற்ற செலவுகளை அமைச்சுகள் தவிர்க்க வேண்டும் என்றும் திரு நஜிப் கேட்டுக்கொண்டார்.

அமைச்சுகள் தேவையானவற்றுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக அமைச்சர் ஒருவர் கூறினார். பிரதமருடனான அந்த மூன்று மணி நேர சந்திப்பின்போது துணைப் பிரதமர் அகமது சாகிட் ஹமிடி உள்பட 36 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

மலேசியாவுக்கு சென்ற ஆண்டு எப்படி இருந்தது என்பது பற்றி கூறிய அவர், இந்த ஆண்டு அரசாங்கத்திற்கு இன்னும் சவாலாக இருக்கும் என்று சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!