ரயில் பாகங்கள் காலாவதி தேதிக்கு முன்னரே மாற்றப்படுகின்றன

ரயில் பாகங்கள் மாற்றப்படுவது குறித்து தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திரு டென்னிஸ் டான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கோ பதிலளித்தார். பாதுகாப்பு, நம்பகத்தன்மை கருதி பல ரயில் பாகங்கள் அதன் காலாவதி தேதி நெருங்கும் முன்பாகவே மாற்றப்பட்டுவிடுகின்றன என்று அவர் தெரிவித்தார். ஏனெனில் பாகங்கள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்பதற்கு அவை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன, எப்படி பராமரிக்கப்படுகின்றன,

அவை செயல்படும் சூழல் போன்ற பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன என்று அவர் கூறினார். இதை நிர்ணயிக்க முழுமையான ஆய்வுகள் செய்து, தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ரயில் நிர்வாக நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்று சுட்டிய திரு கோ, நேரத்துடன் பாகங்கள் மாற்றப்படுவதையும் மேம்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய நிலப் போக்குவரத்து ஆணையம் ரயில் நிர்வாக நிறுவனங்களுடன் ஒன்றாகச் செயல்பட்டு கண்காணிப்புச் சாதனங்கள் கிடைக்கும்போது அவற்றைப் பொருத்த உதவி புரிகிறது என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!