எதிர்க்கட்சி தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

காலியாக உள்ள தொகுதியில்லா உறுப்பினர் பதவியை நிரப்பும் தீர் மானம் நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் பாட்டாளிக் கட்சியின் திரு டேனியல் கோ அந்த இடத்தை நிரப்ப வழி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கார சாரமான விவாதம் நடைபெற் றது. பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதியில் தோற்ற பாட் டாளிக் கட்சியின் திருவாட்டி லீ லி லியன் நிராகரித்த அந்த இடம் நிரப்பப்படவேண்டும் என்ற தீர்மானத்தை பாட்டாளிக் கட்சி முன்வைத்தது.

அந்த இடத்தை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு தோற்ற தனது கட்சியின் திரு டேனியல் கோ நிரப்புவார் என்று முன்னதாகவே அக்கட்சி கூறி வந்துள்ளது. இதுகுறித்து பேசிய பாட் டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு லோ தியா கியாங், தொகுதியில்லா உறுப் பினர் பதவி மக்கள் செயல் கட்சியின் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்டது என்றும் ஆனால் தற்போதுள்ள அரசியல் முறைக்கு உட்பட்டுதான் ஒரு விசுவாசமான எதிர்க்கட்சி செயல்படும் என்பதால் தாங்கள் திருவாட்டி லீக்குப் பதிலாக திரு கோவைத் தொகுதியில்லா உறுப் பினர் பதவிக்குப் பரிந்துரைப்பதாகவும் கூறினார்.

காலியான இடத்தை இன் னொரு எதிர்க்கட்சி உறுப்பி னரைக் கொண்டு நிரப்புவதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது என்றும் பாட்டாளிக் கட்சியின் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் குறிப்பிட்டார். இது குறித்துப் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், "காலியான தொகுதியில்லா உறுப்பினர் இடத்தை நிரப்பும் தீர்மானத்தை ஆதரிக்க எந்தப் பிரச்சினையும் இல்லை என் றாலும் திருவாட்டி லீ அந்த இடத்தை நிராகரித்ததற்கான காரணங்கள் குறித்தும் அந்த இடத்தை இன்னொருவருக்குக் கொடுப்பது குறித்தும் தங் களுக்குப் பிரச்சினை உள்ளது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!