நெய்மாருக்கு அபராதம்

சாவ் பாலோ: வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்காக பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மாருக்கு $112,000 அமெரிக்க டாலர் (S$160,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007, 2008ஆம் ஆண்டுகளில் பிரேசிலின் சான்டோஸ் குழுவிற்காக விளையாடியபோது அவர் வருமான வரித் தாக்கலில் முறைகேடு செய்ததாகக் கூறப்பட்டது. இதை அடுத்து, பிரேசில் நிதித்துறை ஆணையம் 2012ஆம் ஆண்டு அவருக்கு அபராதம் விதித்தது.

அதை எதிர்த்து நெய்மார் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது சரிதான் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த அபராதத் தொகையால் அவருக்குத் துளியும் பாதிப்பு இருக்காது எனத் தெரிகிறது. ஏனெனில், இப்போது பார்சிலோனா குழுவிற்காக விளையாடி வரும் அவர் வாரத்திற்கு $215,000 (S$306,000) ஊதியம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!