வசதி குறைந்தோருக்கும் பண்டிகை குதூகலம்

சுதாஸகி ராமன்

பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சி யுடன் எதிர்நோக்கும் அதே நேரத் தில் வசதி குறைந்தவர்களையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களுக் குள்ளும் பண்டிகை மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று திரு விக்ரம் நாயர் வலியுறுத்தியுள்ளார். சைனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 12வது ஆண்டாக நடைபெற்ற சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு விக்ரம் நாயர்.

"சீனர்களுக்கு சீனப் புத் தாண்டு மிக முக்கியமான கொண் டாட்டமாக இருந்தாலும் சிலருக்கு அதைக் கொண்டாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். "அப்படிப்பட்டவர்களும் சீனப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சீனர் அல்லாதவர்கள் முயற்சி எடுத்து இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத் துவது பாராட்டுக்குரியது," என் றார் திரு விக்ரம்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் செயல்படும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் (இடது) வழங்கும் 'ஹோங் பாவ்' உறையைக் குதூகலம் பொங்க பெற்றுக் கொள்கிறார் சீன மூதாட்டி ஒருவர். அருகில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் திரு எஸ்.நல்லதம்பி. படம்: த. கவி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!