கடந்த 2010 முதல் 2015 வரை மறுவிற்பனைத் தீர்வையைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி 7,600 விண்ணப்பங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு வந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். அவற்றில் 3,500 விண்ணப்பங்கள் முழுத் தீர்வையையும் தள்ளுபடி செய்யக் கோரியும் 4,100 விண்ணப்பங்கள் பகுதித் தள்ளுபடி கோரியும் வந்தன.
தீர்வையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வீவக அனுமதிப்பதில்லை என்பதால், பகுதித் தள்ளுபடி கேட்ட மூன்றில் ஒரு பங்கினரின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.