ஜெர்மனியில் புத்தாண்டுக்கு முதல்நாள் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள்

ஜெர்மனியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்களால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியின் கோலோன் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது தாங்கள் துன்புறுத்தலுக்கும் பாலி யல் வன்முறைக்கும் உட்படுத்தப் பட்டதாக கிட்டத்தட்ட 100 பெண்களுக்கு மேல் புகார் அளித் துள்ளனர்.

இது கோலோன் நகரின் முக்கிய ரயில்வே நிலையத்துக்கு வெளியே உள்ள சதுக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசியல் தலைவர்கள் இத்தகைய செயல்களைக் கண்டித்துள்ளனர். அத்துடன், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முதலில் அதிகாரிகள் மூடிமறைக்க முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்நகர மேயர் வழங்கிய அறிவுரையும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஜெர்மனியின் கோலோனுடன் மற்ற நகரங்களிலிருந்தும் இது குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஜெர்மனி போன்ற நாட்டில் இது எவ்வாறு நடக்கலாம் என்று பார்வையாளர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கேள்வி எழுப்புவதாக பிபிசி தகவல் கூறுகிறது.

ஜெர்மனியின் கோலோன் நகரில் புத்தாண்டுக்கு முதல் நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களில் பலரை, பெரும் கும்பலாக வந்த சுமார் 1,0-00 இளையர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதுகுறித்து புகார் செய்துள்ளனர். கோலோன் நகரில் ஒரு ரயில் நிலையத்திற்கு வெளியில் உள்ள சதுக்கத்தில் அந்த அந்த வன்முறைச் சம்பவம் நடந்தது. அந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலோன் நகரில் பல பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!