‘பாரா’ விளையாட்டாளர்களுக்குப் பாராட்டு

கடந்த மாதம் நடைபெற்ற உடற் குறையுள்ளோருக்கான எட்டாவது ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் சென்ற ஆண்டு ஜூலையில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகளி லும் பங்கேற்ற சிங்கப்பூர் விளை யாட்டாளர்களைப் பாராட்டும் விதமாக இஸ்தானாவில் அதிபர் டோனி டான் கெங் யாம் நேற்று தேநீர் விருந்தளித்துக் கௌரவித் தார்.

சிங்கப்பூரில் முதன்முதலாக இடம்பெற்ற ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிகளில் உள்ளூர் விளையாட்டாளர்கள் 24 தங்கம், 17 வெள்ளி, 22 வெண் கலப் பதக்கங்களை வேட்டை யாடினர். லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் உலக விளை யாட்டுப் போட்டிகளில் 12 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலப் பதக் கங்களை சிங்கப்பூர் அள்ளியது. இந்த இரு போட்டிகளிலும் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் வெளிப்படுத்திய போராட்ட உணர் வையும் கனிவன்பையும் அதிபர் டான் மெச்சினார். "அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அவசியத்தையும் அந்தப் போட்டிகள் குறிப்பிட்டுக் காட்டின. பன்முகத்தன்மைமிக்க நமது சமூகத்தில் எந்த ஒரு சிங்கப்பூரரும் விடுபட்டுப் போய் விடக்கூடாது என்பதை நாம் உறுதி செய்யவேண்டும்," என்றார் டாக்டர் டான்.

இஸ்தானாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தேநீர் விருந்து நிகழ்ச்சியின்போது அதிபர் டோனி டான் கெங் யாம் (நடுவில்), திருமதி டோனி டான் (வலமிருந்து 4வது), கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (வலமிருந்து 3வது) ஆகியோர் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த பாரா விளையாட்டாளர்களிடம் உரையாடி மகிழ்ந்து, அவர்கள் மேலும் வெற்றிகளைக் குவிக்க ஊக்குவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!