இரட்டை பாதுகாப்புடன் சிங்பாஸ்

இருமுறை உறுதிப்படுத்தும் வகை யிலான புதிய சிங்பாஸ் '2எஃப்ஏ' நடைமுறை இவ்வாண்டு ஜூலை 5ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. அதன்பிறகு மத்திய சேம நிதி, உள்நாட்டு வருவாய் ஆணையம் போன்ற அரசாங்க அமைப்புகளின் இணையவழி சேவைகளைப் பயன் படுத்த பொதுமக்கள் தங்களது அடையாள எண், சிங்பாஸ் மறைச் சொல்லுடன் ஒருமுறை மட்டும் செல்லத்தக்க (ஓடிபி) மறைச்சொல் லையும் பதிவிட வேண்டியிருக்கும்.

சிங்கப்பூர் குடிமக்கள் அடுத்த மாத மத்தியிலிருந்து குறுஞ்செய்தி மூலமாக புதிய '2எஃப்ஏ' முறை யில் தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம். இப்போது சிங்பாஸ் இணையத்தளத்தில் மட்டும் அந்த வசதி இருக்கிறது. மேலும், அனைத்து சிங்பாஸ் பயனாளிகளும் அடுத்த மாதம் முதல் '2எஃப்ஏ' முறைக்குத் தானாகவே மாறலாம். இதற்காக ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு மறைச்சொல் அடங்கிய கடிதம் அவர்களுக்கு அனுப்பப்படும். அந்த மறைச்சொல்லைக் கொண்டு குறிப்பிட்ட இணையப் பக்கம் மூலமாக அல்லது குறுஞ்செய்தி மூலமாக அவர்கள் '2எஃப்ஏ' முறையில் தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!