மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த தொடக்­கப்பள்ளி மாண­வர்­களுக்கு நேற்று கல்வி உதவி நிதியை வழங்­கி­யது தமிழர் பேரவை. 2000ஆம் ஆண்டு முதல் மாண­வர்­களுக்கு கல்வி உதவி நிதியை வழங்கி வரு­கிறது தமிழர் பேரவை. உமறுப்புலவர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்­சி­யில் 60க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் பய­னடைந் த­னர். குடும்ப வரு­மா­னத்­தின் அடிப்­படை­யில் தேர்வு செய்­யப்­பட்ட மாண­வர்­கள், $100 முதல் $300 வரை­யி­லான தொகையைப் பெற் றுக்­கொண்ட­னர். இவ்­வாண்டு மாண­வர்­களின் கல்விச் செலவுக் காக கிட்­டத்­தட்ட $20,000 ஒதுக்­கப்­பட்­ட­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

தமிழர் பேரவை­யின் கல்வி விருது நிகழ்ச்­சி­களின் மூலம் இதுவரை 1,800க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் பய­னடைந்­துள்ள தாகவும் ஏறக்­குறைய $150,000 வரை வழங்கப்பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்பட்டது. உதவி நிதி பெற்ற மாண­வர்­களில் ஒரு­வ­ரான ஜிங்ஷான் தொடக்­கப்­பள்ளி மாணவி 10 வயது சக்தி தில்லை­ம­கேஸ்­வ­ரன் முதன்முறையாக உதவி நிதியைப் பெற்­றுக்­கொண்டார். குடும்பத்­தில் ஒரே பிள்ளை­யான அவர், $150 பெறு­மா­ன­முள்ள காசோலையைப் பெற்றார். "கல்வி உதவி நிதியைப் பெற்­றுக்­கொள்­வது உற்­சா­கத்தை அளிக்­கிறது. பள்ளிப் புத்­த­கங்கள், எழு­து­வதற்­கு­ரிய பொருட்­களை வாங்­கு­வதற்கு இந்தப் பணம் கைகொ­டுக்­கும்," என்றார் தொடக்­க­நிலை 5ல் பயிலும் சக்தி.

தமிழர் பேரவை நேற்று ஏற்பாடு செய்­தி­ருந்த கல்வி உதவி நிதி வழங்­கும் நிகழ்ச்­சி­யில் ஜிங்ஷான் தொடக்­கப்­பள்ளி மாணவி சக்தி தில்லை­ம­கேஸ்­வ­ர­னுக்கு கல்வி உதவி நிதியை வழங்­கு­கிறார் சிங்கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவர் திரு மு.அ. மசூது (நடுவில்). இடக்­கோ­டி­யில் நிற்­ப­வர் தமிழர் பேரவை­யின் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்­தி­ரன். படம்: தமிழர் பேரவை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!