15 சமூக மன்றங்களில் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ வகுப்புகள்

சிங்கப்­பூ­ரர்­களுக்­காக இம்­மா­தத் தொடக்­கத்­தில் அறி­மு­கப்­படுத்­தப்­பட்ட 'ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர்' திட்­டத்­தின் கீழ் 15 சமூக மன்றங்களில் 45க்கும் மேற்­பட்ட சுய மேம்பாட்டு, திறன் மேம்பாட்­டுப் பாடத் திட்­டங்களை மக்கள் கழகம் ஏற்பாடு செய்­துள்­ளது. அந்தப் பாடங்களில் இதுவரை 1,000க்கும் மேற்­பட்­டோர் சேர்ந்­துள்­ள­னர். சமூக மன்றங்களில் நடத்தப் படும் கைபேசி, சமூக ஊட­கங்களைப் பயன்­படுத்­தும் முறை, தேநீரைச் சுவைத்து மதிப்­பி­டு­தல் போன்றவை உள்­ளிட்ட பல வகுப்­பு­கள், குடி­யி­ருப்­பா­ளர்­களின் விருப்­பங்கள், வாழ்நாள் கல்வித் தேவைகள் ஆகி­ய­வற்றைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மக்கள் கழகம் ஏற்பாடு செய்த 'ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர்@பிஏ' முயற்­சி­யின் அங்க­ மா­கும். 25 வய­துக்கு மேற்­பட்ட அனைத்து சிங்கப்­பூ­ரர்­களும் அவர்­க­ளது கணக்­கில் சேர்ப்­பிக்­கப்­பட்ட $500 'ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் கிரடிட்' தொகையை இந்த வகுப்­பு­களுக்­குப் பயன்­படுத்­த­லாம்.

இந்த வகுப்­பு­களைப் பற்றிய விழிப்­பு­ணர்வை, குறிப்­பாக மூத்த குடி­மக்­களிடையே ஏற்­படுத்­து­வதற்­காக பிடோக் சமூக நிலை­யத்­தில் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடத்­தப்­பட்­டது. இதுவரை 200க்­கும் மேற்பட்ட வகுப்­பு­கள் தொடங்கப்­பட்­டுள்­ளன. கட்­ட­ணக் கழி­வுக்­குப் பிறகு சில வகுப்­பு­களுக்­கான கட்­ட­ணம் 10 வெள்­ளி­யி­லி­ருந்து தொடங்­கு­ கிறது. சில வகுப்­பு­களில் பாடத்தை முயன்று பார்த்து அவற்­றில் பதிவு செய்­து­கொள்­வதற்­கான ஏற்­பாடும் செய்­யப்­பட்­டி­ருந்தது.

பிடோக் சமூக மன்றம் ஏற்பாடு செய்த 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்@பிஏ' நிகழ்ச்சியில் வகுப்புகளின் மாதிரிச் செய்முறையை ஆர்வத்துடன் பார்வையிடும் மூத்த குடிமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!