அரசியலுக்கும் தேவை பரிணாம வளர்ச்சி

பிரிட்டனின் காலனியாக முன்பு இருந்துவந்த நாடுகள் உட்பட உலகில் இப்போது மக்களாட்சி நடக்கும் சுதந்திர நாடுகளின் அரசியல் முறைகளில் சிங்கப்பூருக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. சிங்கப்பூர் 1965ல் சுதந்திரம் அடைந்தது முதலே அதை ஆட்சிபுரிந்துவரும் மக்கள் செயல் கட்சி, முதல் 50 ஆண்டுகளில் வாக்களிப்பு மூலம் மக்களின் ஏகோபித்த முழு ஆதரவைப் பெற்றதால் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் குரல் ஒலிக்காத நிலை ஏற்பட்டது. என்றாலும், அரசாங்கத்தைத் தட்டிக்கேட்க குரல் ஒலிக்கவேண்டும் என்று ஏறக்குறைய ஒரு தலைமுறைக்கு முன்பே தானே முன்வந்து பல புதுமைகளைச் செய்த மக்களாட்சி நாடு சிங்கப்பூர்.

சிங்கப்பூர் -1984ல் 'தொகுதி இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்' என்ற முறையை அமலாக்கியது. பிறகு 1990ஆம் ஆண்டில் 'நியமன நாடாளுமன்ற உறுப்பினர்' என்ற பதவியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் குரலும் பலதுறை வல்லுநர்களின் கருத்துகள், எண்ணங்கள், யோசனைகளும் மன்றத்தில் இடம்பெற வேண்டும். இதனால், குறிப்பாக இளையர்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்தில் இவை எல்லாம் இடம்பெற்றன. சிங்கப்பூரில் சிறுபான்மையினருக்கு எப்போதுமே சம அந்தஸ்து இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் 1988ல் 'குழு பிரதிநிதித்துவ தொகுதிகள்' முறை அமலானது. நாட்டின் சேமிப்புக்கு ஆபத்து வரக்கூடாது. பொதுச் சேவை நேர்மைமிக்கதாக இருக்கவேண்டும் என்ற நோக் கங்களுடன் 1991ல் 'மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிபர் முறை' நடப்புக்கு வந்தது. இந்த மாற்றங்கள் எல்லாம் விரும்பிய பலனைத் தந்து வெற்றிகரமாக இருந்து வருகின்ற போதிலும் காலம் வேக மாக மாறுவதால் அதற்கு ஏற்ப சிங்கப்பூர் அரசியல் முறை யும் பரிணமித்து மாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படிப்பபட்ட மாற்றம் சிங்கப்பூரை அடுத்த 50 ஆண்டு களுக்கு ஆயத்தப்படுத்தும் நோக்கத்துடன் இருக்கவேண் டும் என்பதை வலியுறுத்தி, அரசியல் முறையில் பல மாற்றங்களை நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார் பிரதமர் லீ சியன் லூங். அதன்படி, அடுத்த தேர்தலுக்குப் பிறகு மன்றத்தில் எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய கால் பங்காக அதாவது 21 பேராக அதிகரிக்கும். அரசமைப் புச் சட்ட திருத்தம், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஆகியவற்றில் இப்போது வாக்களிக்க முடியாத 'தொகுதி இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்' அடுத்த தேர்தலுக்குப் பிறகு சம வாக்களிப்பு உரிமையைப் பெற்று இருப்பார்கள். மக்களே அதிபரைத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பார்கள். என்றாலும் அந்தப் பதவியை இன்னும் ஆற்றல்மிக்கதாக, துடிப்புமிக்கதாகச் செய்ய சரியாக்கங்கள் தேவை என்பதால் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையில் 'அரசமைப்புச் சட்ட ஆணையம்' ஒன்று ஏற்படுத்தப்பட்டு அது மூன்று பரந்த துறைகளைப் பரிசீலிக்கும்.

பிரதமர் முன்வைத்த அரசியல் முறை மாற்றங்களின் தொடர்பில் மன்றத்தில் நடந்த விவாதங்களில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பொதுவாக மாற்றங்களை வரவேற்று இருக்கிறார்கள். மக்களாட்சி தத்துவத்தில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஓர் ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு உரம் போட்டு வளர்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மக்களின் நம்பிக்கையை ஓர் அரசியல் கட்சி பெற வேண்டுமானால் அக்கட்சி வெறும் புதராக இருந்துவிட முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, தன்னை இடைவிடாமல் புதுப்பித்துக் கொள்வது ஆளும் மசெகவின் தாரக மந்திரமாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் பல தரப்புகளில் இருந்தும் முன் வைக்கப்படும் ஆக்ககரமான யோசனைகள், பரிந்துரை களுக்கு ஆளும் கட்சி செவிசாய்க்க வேண்டும். வருங்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க யாராலும் இயலாது என்றாலும் எதிர்காலத்தில் சிங்கப்பூர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கணக்குடன் மக்கள் செயல்கட்சி போடும் தொலைநோக்கு அரசியல் திட்டம் வெற்றிபெறும்போது உலகில் உண்மையான மக்களாட்சி நாடாக சிங்கப்பூர் இன்னும் வலுப்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!