இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக்கிய விருதுக்கு புனைவு, புனை வல்லாதவை, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கையில் மொத்தம் 235 நூல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாக சிங்கப்பூர் புத்தக வாரியம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட 182 நூல்களை ஒப்புநோக்க இவ்வாண்டு 53 நூல்கள் அதிகமாக வரப்பெற்றுள்ளன. ஆங்கிலப் புனைவல்லாதவை, சீனப் புனைவு, சீனப் புனைவல்லாதவை, மலாய் கவிதை, தமிழ் புனைவு ஆகிய பிரிவுகளில் நூல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
நான்கு மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்நூல்களுள் சிங்கப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூல்களின் பட்டியல் மே மாதம் மத்தியில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்படும் நூல்களும் நூலா சிரியர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இடம்பெறுவர். பின்னர், ஜூலை மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் கோலாகல நிகழ்ச்சியில் வெற்றி பெறும் நூல்கள், விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
கலாசார விருது, 2015 தென்கிழக்காசிய எழுத்து விருது பெற்ற சிங்கப்பூரின் தமிழ் எழுத்தாளர் திரு ஜே.எம்.சாலி. ஸ்ட்ரெய்ட்ஸ் கோப்புப்படம்