கை நழுவிய சாதனை

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டிக்கான மகளிர் ஒற்றையர் பிரிவின் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை ஏஞ்சலிக் கெர்பா வென்றுள்ளார். 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு, 'கிராண்ட் ஸ்லாம்' டென்னிஸ் போட்டி பட்டத்தை வென்றுள்ள முதல் ஜெர்மானியர் என்ற பெருமை இவரைச் சேரும். 1999ஆம் ஆண்டில் கெர்பாவுக்கு மிகவும் பிடித்தமான, தமது முன்மாதிரியாகக் கருதிய ஜெர்மானிய வீராங்கனை ஸ்டெஃப்பி கிராஃப் 'கிராண்ட் ஸ்லாம்' பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் கடுமையான போட்டிக்குப் பிறகு அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை 6-4, 3-6, 6-4 எனும் செட் கணக்கில் வென்றார் கெர்பா. தமது ஏழாவது மெல்பர்ன் பார்க் பட்டத்தையும் 22வது 'கிராண்ட் ஸ்லாம்' பட்டத்தையும் வெல்லும் இலக்குடன் களமிறங்கிய செரீனா வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நேற்றைய ஆட்டத்தை 34 வயது செரீனா கைப்பற்றியிருந்தால் ஒற்றை யர் பிரிவில் ஆக அதிக 'கிராண்ட் ஸ்லாம்' பட்டங்களை வென்ற ஸ்டெஃப்பி கிராஃப்பின் சாதனையை அவர் சமன் செய்திருப்பார். தமது முதல் 'கிராண்ட் ஸ்லாம்' இறுதிச் சுற்று என்றபோதிலும் எவ்வித பதற்றமும் இல்லாது சக்கைப் போடு போட்டார் 28 வயது கெர்பா. அனல் பறந்த இறுதிச் சுற்று ஆட்டத்தின் முதல் செட்டை கெர்பா 6=4 எனும் புள்ளிக்கணக்கில் வென்றார். துவண்டுவிடாமல் ஆடிய செரீனா இரண்டாவது செட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார்.

இதன் விளைவாக மாபெரும் வெற்றியாளரை நிர்ணயிக்க மூன்றா வது செட் தேவைப்பட்டது. இதில் இருவரும் விட்டுக்கொடுக் காமல் ஆடினர். மூன்றாவது செட்டின் ஒரு கட்டத்தில் 5-2 என்று கெர்பா முன்னிலை வகித்தார். தோல்வியைத் தவிர்க்கப் போராடிய செரீனா புள்ளிக்கணக்கை 5=4 என்றாக்கினார். இருப்பினும், இறுதி யில் வெற்றியின் சுவையை ருசித்த கெர்பா கொண்டாட்டத்தில் மூழ்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!