பிளிண்ட், மாட்டா அசத்தல்; வேன் ஹால் நிம்மதி

டார்பி: எஃப்ஏ கிண்ண ஆட்டம் ஒன்றின் பிற்பாதி ஆட்டத்தில் டெலி பிளிண்ட், யுவான் மாட்டா ஆகியோர் போட்ட கோல்கள், டார்பி கவுண்ட்டி குழுவுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. தொடர்ந்து பல ஏமாற்றங்களைச் சந்தித்து, பணி நீக்கம் செய்யப் படும் அபாயத்தை எதிர்நோக்கிய யுனைடெட் குழுவின் நிர்வாகி வேன் ஹாலுக்கு இந்த வெற்றி சிறிது நிம்மதியை அளித்துள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த எஃப்ஏ கிண்ண நான்காவது சுற்று ஆட்டத்துக்கு முன்பு, யுனை டெட் தோல்வியைத் தழுவியிருந் தால் தாம் பணி நீக்கம் செய்யப் படக்கூடும் என்று வேன் ஹால் தெரிவித்திருந்தார். கடந்த வாரயிறுதியில் சொந்த அரங்கில் சவுதாம்டன் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்ததால் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் வேன் ஹால். நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் யுனைடெட்டின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் வெயின் ரூனி அனுப்பிய பந்து டார்பி குழுவின் கோல் காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தொட்டது.

இதுவே கடந்த ஆறு ஆட்டங்களில் ரூனி போட்ட ஆறாவது கோலாகும். அதனைத் தொடர்ந்து யுனைடெட் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. டார்பி குழு, யுனைடெட் கோல் காப்பாளருக்கு அதிக மிரட்டல்களை விடுக்காமல் இருந்தபோதிலும் ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அது கோல் போட்டது.

டார்பியைச் சேர்ந்த தோர்னைக் கவனிக்காமல் விட்ட யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர்கள் அதற் கான தண்டனையை அனுபவித் தனர். கண் சிமிட்டும் நேரத்தில் பந்து வலைக்குள் சென்றது. இதனால் இடைவேளையின் போது ஆட்டம் 1-1 என்று சமநிலையில் இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் யுனை டெட்டின் அதிரடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்த டார்பி, பிளிண்ட், மாட்டா ஆகியோரின் கோல்களுக்கு வீழ்ந்தது. இறுதியில் ஆட்டம் 3-1 எனும் கோல் கணக்கில் யுனைடெட்டுக்குச் சாதகமாக முடிந்தது.

வெற்றியைக்கொண்டாடும் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!