எஸ்விஎஸ் மாணவர்களை அரசு கல்லூரிக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவு

விழுப்புரம்: எஸ்விஎஸ் யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்திட தமிழக அரசு உத்தரவிட் டுள்ளாது. இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்விஎஸ் யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதியும் அவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கிலும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்து டிஜிபி அசோக் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள அந்த தனியார் கல்லூரியில் அதிகளவு கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்ட தாகவும் கல்லூரி விடுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லையென மாணவர் தரப்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகை யில் மூன்று மாணவிகள், கல்லூ ரிக்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் மாணவிகள் கொலை செய்யப்பட்டதாக அவர் களது பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே, குறிப்பிட்ட அந்தக் கல்லூரிக்கு திமுக ஆட்சிக்காலத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பாமக இளையரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். "அக்கல்லூரியில் இப்போதே எந்தவித கட்டமைப்பு வசதியும் இல்லை எனும்போது, 8 ஆண்டு களுக்கு முன் நிச்சயமாக கட்ட மைப்பு வசதிகள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியென்றால், அந்தக் கல்லூரிக்கு எந்த அடிப் படையில் அனுமதி வழங்கப் பட்டது?" என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!