கவர்ச்சியில் கலக்கியிருக்கும் திரிஷா

திரிஷாவிற்கு வயது 32 ஆனாலும் இன்றும் 16 வயதுப் பெண்ணைப்போல் கட்டுக்கோப்பான உடலுடன் வளைய வருகிறார். அதனை நிரூபிக்கும் வகையில் அண்மையில் வெளிவந்திருக்கும் 'அரண்மனை 2' படத்தில் நீச்சல் உடையில் வந்து கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார். 'அரண்மனை 2' படத்தின் ஆரம்பத்திலேயே சித்தார்த்துடன் ஒரு பாடலில் 'பிகினி' உடையில் வந்து கலக்கியிருக்கும் திரிஷா, அதன் பின்னர் ஹன்சிகா பேய் அவர் உடலில் ஏறிக்கொண்டு அவரை ஆட்டி வைப்பதும் திரிஷா பேயாகவே மாறி, கண்களை உருட்டி மிரட்டி நடித்திருப்பதும் திரிஷா ரசிகர்களுக்கு அல்வாவை வாயில் ஊட்டி விட்டமாதிரி இருந்திருக்கும்.

இந்தப் படத்தில் திரிஷா காட்டிய கவர்ச்சியினால் இன்னும் ஓர் ஐந்து வருடங்களுக்குத் தமிழ்த் திரையுலகைச் சுற்றி வருவார் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். அண்மையில் அவர் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது கல்லூரிக் காலத்தில் உங்கள் செல்லப் பெயர் என்ன என்ற கேள்விக்கு, "கல்லூரியில் நான் படித்தபோது எனது செல்லப் பெயர் 'திரிஷா தி டெரர்' என்றார். யாருடன் நடிக்க ஆசை என்று கேட்டபோது, '

ரஜினியுடன்' என்று கூறினார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டீர்களாமே என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, "அப்படி எல்லாம் இல்லை. அவருடன் நடிக்க எனக்கும் விருப்பம்தான்," என்று பதில் அளித்தார். திரிஷாவின் இந்தப் பதிலை அறிந்த சிவகார்த்திகேயன், தனது டுவிட்டர் பக்கத்தில் திரிஷாவுக்கு நன்றி கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எனவே மிக விரைவில் சிவகார்த்திகேயனுடன் திரிஷா ஜோடி சேர வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!