கர்ப்பிணியாக நடித்த ஹன்சிகா

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 'அரண்மனை 2'. இந்தப் படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் கள். ஹன்சிகா இந்தப் படத்தில் ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிறார். அதுபற்றி அவர் கூறுகையில், "சுந்தர்.சி. என்னிடம் இரண்டு மாத கர்ப்பிணியாக நடிக்கும்படி கூறினார். ஆனால் நான்தான் ஏழுமாதக் கர்ப்பிணியாக நடிக்கிறேன் என்றேன். அவரும் சம்மதித்தார். ஆனால் அந்த வேடம் அவ்வளவு எளிதானது இல்லை என்பதை நான் நடிக்கும்போதுதான் உணர்ந்தேன்.

"கர்ப்பிணிப் பெண்ணாக நடிப்பது சுலபம் அல்ல. நடை உடை பாவனைகளில் மாற்றம் தெரியவேண்டும். அதற்காக நான் சிரமப்பட்டேன். படம் பார்த்துவிட்டு சுந்தர்.சி என் நடிப்பைப் பாராட்டினார். "மேலும் இந்தப் படத்தில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. குடும்பப்பாங்காகவே என்னைக் காட்டியிருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரத்தை நான் நிறைவாகச் செய்திருக்கிறேன். அந்த வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார். முன்பைவிட மிகவும் மெலிந்து காணப்படுகிறீர்களே! அதன் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு, "ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறேன். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், 'ஸ்குவாஷ்' விளையாடுகிறேன். தினமும் 'யோகா' செய்கிறேன். எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன். வேறு எந்த ரகசியமும் இல்லை," என்று கூறினார் ஹன்சிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!