காத்திருக்கும் நாயகி சானியாதாரா

அழகு, திறமை இருந்தாலும் திரையுலகில் மின்னுவதற்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு வாய்ப்புக்காகவும் நல்லதொரு திருப்பு முனையான படத்துக்காகவும் காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் நடிகை சானியாதாரா. இவர் சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்த்தேசம் வந்திருப்பவர். பிறந்தது ஹைதராபாத் என்றாலும் தமிழ் நன்றாகப் பேசுகிறார். கடந்தாண்டு வெளியான 'ஜிகினா' படத்தின் நாயகி இவர். 'வாராயோ வெண் ணிலாவே' படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். அடுத்து சுசீந்திரன் இயக்கிய 'ஜீவா'வில் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். இயற்பெயர் சானியா ஷேக். பிடித்த நடிகை நயன்தாரா.

"அதனாலோ என்னவோ, என் பெயரும் எண் கணிதப்படி சானியாதாரா என்று அமைந்துவிட்டது. சிறு வயதிலேயே சினிமா ஆர்வம் அதிகம். முறைப்படி நடனம் கற்றுக் கொண்டேன். "தொடக்கத்தில் சில விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதையடுத்து திரைப்பட வாய்ப்பும் தன் னாலே தேடி வந்தது. பிறகென்ன, கொஞ்சம் கூடத் தயங்காமல் யோசிக்காமல் இந்தத் துறைக்கு வந்துள்ளேன்." திரையுலகில் உங்களுக்கு முன்மாதிரி யாக யாரைக் குறிப்பிடுவீர்கள்? "முன்பே சொன்னதுபோல் நயன் தாராவைப் பிடிக்கும். ஜோதிகா நடிப்பையும் ரசிப்பேன். பிடித்த கதாநாயகன் சூர்யா. இந்தியில் ஹிருத்திக் ரோஷனையும் ஐஸ்வர்யா ராயையும் ரொம்பப் பிடிக்கும். "இயக்குநர்களில் ராஜமௌலி, மணிரத் னம், சங்கர் எனக்கு விருப்பமான படைப்பாளிகள்." வேறென்ன பிடிக்கும்? "தொலைக்காட்சி பார்ப்பது, நடனம் ஆடுவது மட்டும் அல்ல, எனக்குச் சமைக் கவும் பிடிக்கும். கோழி பிரட்டல் என்றால் கொள்ளை ஆசை."

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!