வசதி குறைந்தோருக்கு ‘ஹொங் பாவ்’

அங் மோ கியோ வட்டாரத்தில் வசிக்கும் 430க்கும் மேற்பட்ட வசதி குறைந்த முதியோர்கள் பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து நேற்று சீனப் புத்தாண்டுக்கான சிவப்பு 'ஹொங் பாவ்'களைப் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு முதியவருக்கும் $150 ரொக்கமும் $50 மதிப்புள்ள ஷெங் சியோங் பற்றுச்சீட்டுகளையும் பெற்றனர். அங் மோ கியோ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லீ நேற்று டெக் கீ சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்கு இவ்வாண்டின் சிங்கே ஊர்வலத்துக்குப் பயன்படுத் தப்படும் ஆகாய லாந்தர் விளக்குகளுக்கு மாணவர்கள் வண்ணம் தீட்டுவதைப் பார்வையிட்டு மாணவர்களுடன் 'செல்ஃபி' (படம்) எடுத்துக் கொண்டார். பின் அத்தொகுதி மக்களுடன் அளவளாவினார் பிரதமர் லீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!