தங்கள் கட்டடங்களின் பாதுகாப் பிலும் கட்டடங்களைப் பாதுகாப் பாக வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் செயல்முறைகளிலும் நிறுவனங்கள் தங்கள் மனப் போக்கை மாற்றவேண்டிய அவசியம் உள்ளது என்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் கூறியுள்ளார். சிங்கப்பூரின் தனியார் பாது காப்பு அதிகாரிகள் நாட்டின் பாது காப்புக்கு முக்கிய பங்காற் றுகிறார்கள் என்றாலும் அவர்களது பங்கு பெரும்பாலும் புறப்பணிக் கப்படுகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு சான் தமது வலைப்பதிவில் நேற்று பதிவேற்றம் செய்துள்ளார்.
"அண்மைய வாரங்களில் பல தரப்பட்ட பாதுகாப்புப் பிரச்சினைகளில் நாம் அக்கறை செலுத்தி வருகிறோம். நமது சிங்கப்பூர் ஆயுதப் படை, உள்துறை அமைச்சுக் குழு உறுப்பினர்கள் அகியோரின் பயிற்சியிலும் அவர் களை ஆயத்தப் படுத்துவதிலும் அதிகக் கவனம் செலுத்தி வந்துள்ளோம், அது சரியும்கூட. ஆனால் நமது பாதுகாப்புச் சூழலில் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளின் மெச்சத்தகு பங்கு பல முறை புறக்கணிக்கப்படுகிறது," என்று திரு சான் குறிப்பிட்டார்.