ஆர்சனல், ஸ்பர்ஸ் அடுத்த சுற்றில்; லிவர்பூல் சறுக்கல்

ஆன்ஃபீல்ட்: நேற்று அதிகாலை லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் மைதானத்தில் வெஸ்ட்ஹேம் குழுவுக்கு எதிரான எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் லிவர்பூல் குழுவின் நிர்வாகியான யகர்ன் க்ளோப் பல இளம் ஆட்டக்காரர்களைக் களமிறக்கி வெற்றி பெற எண்ணியிருந்தார். ஆனால் அவரின் எதிர்பார்ப் புக்கு மாறாக லிவர்பூல் அணி தட்டுத் தடுமாறி கோல் எதுவும் போட முடியாமல் விரக்தியுடன் வெளியேறியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹேம் குழுவின் என்னர் வெலன்சியா, பெட்ரோ ஒபியாங் ஆகிய இருவரும் கிடைத்த கோல் போடும் வாய்ப்புகளை வீணடித்தனர்.

மறுமுனையில், லிவர்பூலின் ஜோ டெய்சீரா, கேமரன் பிரேனகன், ஜோ ஆலன், கிறிஸ் டியன் பென்டக்கே ஆகியோர் வெஸ்ட்ஹேம் குழுவின் கோல் வலையை நோக்கிப் பந்தை உதைக்க அதை அந்தக் குழுவின் கோல் காப்பாளர் டேரன் ரேண் டோல்ஃப் சர்வ சாதாரணமாகத் தடுத்து வெஸ்ட்ஹேம் குழுவைக் காப்பாற்றினார். இவர்களுடன் சேர்ந்து லிவர்பூலின் மற்றொரு தாக்குதல் ஆட்டக்காரரான கிறிஸ்டியன் பென்டக்கேயும் கோல் வலைக்கு ஆறு மீட்டர் தூரத்தில் இருந்த பந்தை சரிவர உதைக்காததால் அந்தக் கோல் போடும் வாய்ப்பும் வீணானது.

நேற்று ஆர்சனலுக்கும் பர்ன்லி குழுவிற்கும் இடையே நடைபெற்ற நான்காவது சுற்று எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பர்ன்லி குழுவின் இரண்டு தற்காப்பு ஆட்டக்காரர்கள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் அவர்களைத் தாண்டி பந்தை கோல் வலைக்குள் உதைக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!