பால் பவுடர் டின்களில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை: பால் பவுடர் டின்களில் மறைத்து எடுத்து வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கின. இதையடுத்து கோழிக்கோட்டைச் சேர்ந்த ரியாஸ் (32 வயது) என்பவர் கைதானார். நேற்று முன்தினம் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, துபாயில் இருந்து வந்த இவர் உள்ளிட்ட ஐந்து பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது ரியாஸ் கொண்டு வந்த பால் பவுடர் டின்களை ஆராய்ந்தபோது அவற்றுள் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரியாஸ் கைதான நிலையில் மற்ற நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!