பொங்கோல் தீ; 5 இளையர்கள் கைது

பொங்கோல் வாட்டர்வே தீச் சம்ப வம் தொடர்பில் ஐந்து இளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பொங் கோலில் உள்ள பூங்காவில் அவர்கள் தீ மூட்டியிருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்ற னர். இதுபற்றி நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்ட பொங்கோல் அக்கம்பக்க போலிஸ் நிலையம், வாட்டர்வே தொடக்கப் பள்ளிக்கு அருகே பொங்கோல் வாட்டர்வேயில் தீ மூட்டிய குறும்புச் செயலில் ஈடுபட்டதற்காக 14 வயது முதல் 20 வயது வரையிலான ஐந்து இளையர்கள் கைது செய்யப் பட்டனர் என்று தெரிவித்தது.

இதனைப் புதர் தீ என்று வர்ணித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, இரண்டு கூடைப் பந்து திடல் அளவுக்கு தீ பரவிய தாகக் குறிப்பிட்டது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீ அணைப்பு வாகனங்களுடன் நீரைப் பீய்ச்சியடிக்கும் சாதனங் களையும் குடிமைத் தற்காப்புப் படை அனுப்பி வைத்தது. இந்நிலையில் இரவு 10.39 மணி அளவில் தகவல் கிடைத்து அங்கு விரைந்ததாக பொங்கோல் போலிசார் கூறினர். தீயினால் பூங்காவுக்கு சேதம் ஏற்பட்டுள்ள தாகவும் போலிசார் கூறினர். இந்த விவகாரத்தை போலிசார் விசாரித்து வரும் வேளையில் குடிமைத் தற்காப்புப் படையினர் தீ மூண்டதற்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர். நேற்றுக் காலை ஃபேஸ்புக்கில் சுசார்ட் லிம் என்பவர் வெளியிட்ட காணொளிப் படம், தீப்பற்றி எரிவதை மேம்பாலத்தில் கூடிய பலர் அதிர்ச்சியுடன் பார்ப்பதைக் காட்டியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!