வகுப்புகளை புறக்கணிக்க தமிழக ஆசிரியர்கள் முடிவு

தமிழக ஆசிரியர்கள் தங்களுடைய தொடர் மறியல் போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்று வகுப்புகளைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் முடங்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. 'ஜாக்டோ' என்ற தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் இன்றும் தொடரும் என்று 'ஜாக்டோ' அமைப்பின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ராமமூர்த்தி நேற்று கூறினார்.

"ஆசிரியர்களின் போராட்டத் தினால் தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகள் வரை பாதிக்கப்படும்," என்றார் அவர். கடந்த சனிக்கிழமை தொடங்கிய மறியல் போராட்டம் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று 'ஜாக் டோ' அறிவித்துள்ளது. சென்ற சனிக்கிழமை அன்று ஏராளமான ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 25,000 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாக தமிழக நாளேடு ஒன்று குறிப்பிட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 12,000 பேர் ஆசிரியைகள்.- மொத்தம் 15 அம்ச கோரிக் கைகளை முன் வைத்து ஆசிரி யர்கள் போராட்டத்தில் இறங்கி யிருக்கின்றனர். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும்;

ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடு களைக் களைய வேண்டும்; ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட் டத்தை அமல்படுத்த வேண்டும்; அனைத்துப் பள்ளிகளிலும் தாய் மொழியான தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக அறிவிக்க வேண்டும்; ஆசிரியர்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்து வதற்காக தனியாக அலுவல் ஒருவரை நியமிக்க வேண்டும் போன்றவை ஆசிரியர்களின் கோரிக்கைகளில் அடங்கும். தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆங்காங்கே 'ஜாக்டோ' அமைப் பின் சார்பில் போராட்டம் நடை பெற்றது. கடலூரில் காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட 347 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!