இலங்கையில் இன்னமும் தமிழர்கள் சித்திரவதை: மனித உரிமை குழுக்கள்

இலங்கையில் தமிழர்கள் இன்னமும் சித்திரவதைகளுக்கு ஆளாகுகின்றனர் என்று இரு மனித உரிமை குழுக்கள் குற்றம் சாட்டி யிருக்கின்றன. அதிபர் மைத்ரிபால சிறிசேன பொறுப்பு ஏற்று ஓராண்டாகியும் தமிழர்களுக்கு எதிரான சித்திர வதைகள் தொடர்கின்றன என்று அந்த குழுக்கள் தெரிவித்தன. ஆட்சிக்கு வந்த அதிபர் சிறி சேன சீர்திருத்தங்களுக்கு உறுதி கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்ற னர் என்று இரு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்ததாக பிபிசி குறிப்பிட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு களுக்கு அரசாங்கம் இதுவரை பதில் அளிக்கவில்லை. இலங்கையில் அரசுக்கும் விடு தலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே கால் நூற்றாண்டுகளுக் கும் மேல் நீடித்த உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டில் முடி வுக்கு வந்தது.

மேலும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இரு தரப்பிலும் குற் றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையே தென் ஆப்ரிக் காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் 'ஐடிஜெபி' என்ற 'அனைத்துலக உண்மை, நீதி' என்ற குழு, 15 ஆண்களிடமும் ஐந்து பெண்களிடமும் பேசியதாகக் கூறியது. முன்னைய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் மோசமான வன்முறை களுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர் என்று அந்தக் குழு குறிப்பிட்டது. கடந்த ஆண்டின் சில சம்பவங்களில் போலிஸ், ராணுவத்தின் பிடியில் தாங்கள் கும்பலாகக் கற்பழிக்கப்பட்டதாக வும் அவர்கள் கூறினர். தற்போது அவர்கள் அனை வரும் இலங்கை யிலிருந்து வெளி யேறிவிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!