சாகசம் என்ற வீரச்செயல்

நீண்ட இடைவெளிக்குப் பின் பிரசாந்த் நடித்து வரும் படம் 'சாஹசம்'. இதில் இவருக்கு ஜோடியாக அமண்டா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், ஜான்விஜய், ரோபோ சங்கர், தேவதர்‌ஷினி, லீமாபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதுவரை 'சாஹசம்' என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பை மாற்றியிருக்கின்றனர். அதாவது 'சாஹசம்' என்ற தலைப்பை 'சாகசம் என்ற வீரச்செயல்' என்று மாற்றியிருக்கிறார்களாம். 'சாஹசம்' என்ற தலைப்பு தமிழ்ப் பெயரா என்ற பிரச்சினை எழுந்திருக்கிறது. இதன் காரணமாக தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காமல் போகலாம் என்பதால், 'சாகசம் என்ற வீரச்செயல்' என்று மாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அருண் ராஜ் வர்மா இயக்கியுள்ளார். தியாகராஜன் தயாரித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!