பதவியிலிருந்து முக்ரிஸ் நீக்கப்படலாம்

பெட்டாலிங் ஜெயா: கெடா மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து முக்ரிஸ் மகாதீர் நேற்று மாலை நீக்கப்படலாம் என்று தகவல்கள் கூறியிருந்தன. பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ள, திரு முக்ரிஸ் மகாதீரை கெடா ஆட்சி மன்றம் நேற்று சந்தித்ததாகவும் கூறப் பட்டது. இருப்பினும் மாநில அதிகாரி கள் தயாரித்த பதவி விலகும் கடிதத்தில் கையெழுத்திட முக்ரிஸ் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இரண்டாவது தடவையாக முக்ரிஸ் பதவி விலக மறுத்திருக்கிறார். முதல் தடவையாக அவர், வெள்ளிக்கிழமை பதவி விலக மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறின.

கெடா மாநில நெருக்கடி குறித்து அம்மாநில தேசிய முன்னணியின் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிவதற்காக அம்மாநில ஆட்சி மன்றம் நேற்று தனித்தனியாக அந்த உறுப்பினர்களைச் சந்தித் துப் பேசியது. கெடா சட்டமன்ற உறுப் பினர்கள், அம்மாநில ஆட்சி மன்றத்தை சந்திப்பதற்கு முன்பு, நிலவரம் பற்றிக் குறிப்பிட்ட கெடா அம்னோ துணைத் தலைவர் அகமட் பாஷா, முக்ரிஸ் மாற்றப்பட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை ஆட்சி மன்றத்திடம் தெரிவிக்க விருப்பதாகக் கூறி னார். அவர்களில் குறைந்தது 19 சட்டமன்ற உறுப்பினர்கள், முக்ரிஸ் மகாதீருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் முக்ரிஸை பதவியிலிருந்து விலக்குவதற்கான அறிவிப்பை கெடா ஆட்சி மன்றம் பிறப்பிக் கக்கூடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!