மியன்மாரின் புதிய சகாப்தம்; நாடாளுமன்ற முதல் கூட்டம்

யங்கூன்: மியன்மாரில் தேர்ந் தெடுக்கப்பட்ட புதிய நாடாளு மன்றம் நேற்று அதன் முதல் கூட்டத்தைத் தொடங்கியது. புதிய அரசியல் சகாப்தத்தில் மியன்மார் நுழைந்திருக்கிறது. திருவாட்டி ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ஆதரவு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் நம்பிக்கையுடன் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதல் முறையாக நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மியன்மாரில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆரஞ்சு நிற சீருடை அணிந்திருந்தனர். அவர்கள் தங்கள் முதல் நாள் பணியை நேற்று உற்சாகத்துடன் தொடங்கினர். திருவாட்டி சூச்சி, கருத்து எதுவும் கூறாமல் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்தார். நாடாளுமன்ற திறப்பு விழாவில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். நாடாளுமன்ற கீழவை சபாநாய கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு வின் மிண்ட், மியன்மாரின் அரசியல் வரலாற்றில் இன்றைய நாள் பெருமைப்படும் நாளாகும்," என்று கூறினார். நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும் பான்மை வகித்த போதிலும் 25 விழுக்காடு இடங்கள் ராணுவத் திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவி ஆங் சான் சூச்சி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு வருகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!