ஆரோக்கியமான உணவு வழங்கும் பள்ளிச் சிற்றுண்டியகங்கள்

சிங்கப்பூரில் உள்ள பாதிக்கு மேற்பட்ட பள்ளிச் சிற்றுண்டியகங்கள் குறைவான கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ள ஆரோக்கியமான உணவுகளைப் பரிமாறுகின்றன. பெற்றோர்கள் இத்திட்டத்தை வரவேற்றாலும் பள்ளிச் சிற்றுண்டியகங்களில் உணவுகளின் விலை அதிகரித் துள்ளது. சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சிற்றுண்டி மட்டும் தேவைப்படும்போது முழு சமச்சீர் சாப்பாடு வாங்கி சாப்பிடுவது சாத்தியமாகாது என்கின்றனர். 'பள்ளிகளில் ஆரோக்கிய உணவுத் திட்டம்' 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கக் கல்லூரிகளையும் சேர்த்து 209 பள்ளிகள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளன என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் தி ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸிடம் கூறியது.

இத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளின் சிற்றுண்டியகங்கள் 'ஆரோக்கிய தேர்வு முத்திரை' இல்லாத பானங்களை விற்கக்கூடாது, பிழியும் பழச்சாறு களில் இனிப்புச் சுவையூட்டியைச் சேர்க்கக்கூடாது. இதுமட்டுமின்றி, ஏற்கெனவே வறுத்த உணவு வகை களைச் சிற்றுண்டியகங்கள் விற்கக்கூடாது என்று புதிதாக இவ்வாண்டு வந்த திட்டத்தின் வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுகளின் விலை கட்டுப்படியாக இருப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று கூறிய கல்வி அமைச்சின் பேச்சாளர், "விலைக்கு ஏற்ற நல்ல உணவையும் மாணவர்கள் பெற வேண்டும். தேவையுள்ள மாணவர்கள் பள்ளிகளின் இலவச காலை உணவுத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது நிதி உதவி கேட்கலாம்," என்றும் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!