1எம்டிபி: சிங்கப்பூர் நடவடிக்கை

மலேசியாவின் 1எம்டிபி நிதி விசாரணை தொடர்பாக சிங்கப் பூரில் பெருமளவிலான வங்கிக் கணக்குகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக விவகாரத் துறையும் நேற்று தெரிவித்தன. ஊடகங்கள் எழுப்பிய வினாக் களுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்த இரு அரசாங்க அமைப்பு களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் "நிதி அமைப்பு முறைகள் சட்டவிரோத நிதி வடிகாலாகவோ அதற்கு அடைக்கலம் தருவதாகவோ பயன்படுத்தப்படுவதை சிங்கப்பூர் சகித்துக்கொள்ளாது.

"சிங்கப்பூரில் மேற்கொள்ளப் படும் சாத்தியமுள்ள கள்ளப்பண பரிவர்த்தனை தொடர்பாகவும் இதரக் குற்றங்கள் தொடர்பாக வும் கடந்த ஆண்டின் நடுப்பகுதி யில் இருந்தே புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "இந்த விசாரணைகள் தொடர் பில் பல்வேறு நிதி நிறுவனங்களி டமிருந்து தகவல்களைக் கோரிய தோடு மேலும் கோரி வருகிறோம். "பல்வேறு தனிப்பட்டவர் களோடு நேரில் விவரங்கள் பெற்று வருவதோடு பெரும் எண்ணிக்கை யிலான வங்கிக் கணக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

"மலேசியா, அமெரிக்கா, சுவிட் சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சிங்கப்பூர் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது. "வெளிநாடுகளிலிருந்து கேட் கப்படும் அனைத்து கோரிக்கை களுக்கும் தகவல்களுக்கும் பதில் அளித்துள்ளோம். "அத்துடன், எங்களது விசா ரணைக்கு உதவும் வகையில் இதர நாடுகளின் அரசாங்க நிதித் துறையிடமிருந்து தகவல்களைக் கேட்டுள்ளோம். "விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் இந்தக் கட்டத்தில் இதற்குமேல் விவரம் தர இய லாது," என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!