செல்சி குழு அபார வெற்றி

மில்டன் கீன்ஸ்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணத்தின் நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில் செல்சி அபார வெற்றி பெற்று உள்ளது. எம்கே டான்ஸ் குழுவை அது 5-1 எனும் கோல் கணக்கில் பந்தாடி ஐந்தாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் செல்சியின் ஒஸ்கார் மூன்று கோல்களைப் போட்டு அசத்தினார். செல்சிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் எடன் ஹசார்ட் ஒரு கோல் புகுத்தினார். கடந்த 30 ஆட்டங்களுக்குப் பிறகு இதுவே அவர் போட்ட முதல் கோலாகும். புர்கினாபேயைச் சேர்ந்த பெர்டி ராண்ட் டராவோரே செல்சிக்காகத் தமது முதல் கோலைப் போட்டார். செல்சி ஐந்தாவது சுற்றில் மான்செஸ்டர் சிட்டியுடன் பொருதுகிறது. மற்றோர் ஆட்டத் தில் எவர்ட்டன் குழு வாகை சூடியது. கார்லிசல் யுனைடெட்டை அது 3-0 எனும் கோல் கணக்கில் எளிதில் தோற்கடித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!