பாலி­யல் தாக்­கு­த­லில் குடி­யே­றிகளுக்­குத் தொடர்­பி­ருக்­க­லாம்: ஜெர்­மன் பிர­த­மர்

பெர்­லின்: ஜெர்­ம­னியின் கோலோன் மற்­றும் ஹேம்பர்க் நக­ரில் புத்­தாண்­டுக் கொண்டாட்­டத்­தின்­போது பெண்­கள், ஒரு கும்ப­லால் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­யப்­பட்­ட­னர். இந்தச் சம்ப­வத்­திற்­கும் குடி­யே­றிகளுக்­கும் தொடர்­பி­ருக்க வாய்ப்பு இருக்­கிறது என்று பிர­த­மர் ஏஞ்சலா மெர்க்­கெல் முதன்­முறை­யா­கக் கூறி­யுள்­ளார். உண்மையை வெளிச்­சத்­திற்­குக் கொண்டு வரு­வதை உறுதி செய்­யும்படி அதி­கா­ரி­களை அவர் கேட்­டுக்­கொண்டார். "இந்தச் சம்ப­வம் வெவ்­வேறு கலா­சா­ரங்களைச் சார்ந்த­வர்­­­கள் ஒன்­றிணைந்து வாழ முடி­யுமா என்ற கேள்­வியை எழுப்­பி­ய­­­து­­­டன் மேலும் பல கடுமை­யான ஐயங்களை எழுப்­பி­யுள்­ளது. "இது­போன்ற செய்கை­களில் ஈடு­பட்ட கும்பலைச் சேர்ந்த­வர்­களின் நடத்தை மீது சந்­தே­கம் எழுந்­துள்­ளது. பெண்­களை மதிக்­காத போக்­குள்ள ஒரு சில கும்ப­லுக்­கும் இது­போன்ற செயல்­களுக்­கும் தொடர்­பி­ருக்­க­லாம் என்­றும் அவர் கூறினார்.

"நாட்­டின் சட்ட, ஒழுங்கைக் கடைப்­பி­டித்து நடக்­கா­த­வர்­களுக்கு நாம் சரி­யான பாடம் புகட்ட வேண்­டும். ஜெர்­ம­னி­யின் நாடு கடத்­தும் சட்டம் நமக்­குத் தேவை­யான அனைத்தை­யும் கொண்­டுள்­ளதா என்­பதை பரி­சீ­லனை செய்ய வேண்­டும் என்­றும் அவர் கூறினார். பாது­காப்­பற்ற உணர்­வால் பெண்­கள் அச்­ச­மடை­வதை ஒருக்­கா­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது," என்­றும் பிர­த­மர் ஏஞ்சலா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!