தேக்கா நிலையத்தில் தொடரும் மின்படி பழுது

முஹம்மது ஃபைரோஸ்

தேக்கா நிலையத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கடைகளை இணைக்கும் இரு மின்படிகளில் ஒன்று இரண்டு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்து இருந்தது. பழுதுபார்ப்புப் பணிகள் முடி வடைந்து ஜனவரி 30ஆம் தேதி மின்படி மீண்டும் இயங்கியதாக தேக்கா நிலையத்திற்குப் பொறுப்பு வகிக்கும் தஞ்சோங் பகார் நகர மன்றம் தெரிவித்திருந்தது. அடுத்த நாளான ஞாயிறன்று மின்படிகள் வழக்க நிலையில் இயங்கின. இரண்டாம் தளத்தில் உள்ள கடைக்காரர்களும் தேக்கா விற்கு அடிக்கடி வந்து செல்வோ ரும் அதை வரவேற்றனர்.

"நீண்ட நாட்களுக்குப் பிறகு மின்படி சரிசெய்யப்பட்டது நல்ல செய்தி. மின்படி முன்பு இயங்காத தால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துவிட்டது. 10% முதல் 20% வரை வியாபாரம் பாதிக்கப்பட்டது," என்றார் பத்து ஆண்டுகளாக தையல் தொழில் செய்து வரும் திரு ராஜ்குமார். "கால் வலி உள்ள எனக்கு ஏறி இறங்க மின்படிகளின் செயல் பாட்டை நம்பியுள்ளேன். மின்படி பழுதடைந்து இருந்தபோது வழக் கத்தைவிட குறைவாகவே இரண் டாம் தளத்தில் உள்ள கடை களுக்குச் சென்றேன்," என்றார் திருவாட்டி கோமதி செல்வம், 66.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!