வரும் நாட்களில் காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்

பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் சீனப் புத்தாண்டு காலத்தில் தீவின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்யக்கூடும்; அவ்வப்போது காற்றும் வீசலாம். இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மழையின் அளவு சராசரியைவிட அதிகமாக இருக் கும் என்றும் நான்கு முதல் ஐந்து நாட்களுக்குப் பிற்பகலில் இடி யுடன் கூடிய மழையை எதிர் பார்க்கலாம் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த வெப்பமான வானிலை இம்மாதத்தின் நடுப் பகுதி வரை தொடரும். இந்தக் காலகட்டத்தில், அன்றாட அதிக பட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை கள் முறையே 34 டிகிரி செல்சியஸ், 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த மாதத்திலும் சில நாட் களில் மிதமான மழை பெய்தது. அந்த நாட்களில் பிற்பகலிலும் மாலையிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!