டௌன்டவுன் வழித்தடம்: பயணிகள் எண்ணிக்கை 30 விழுக்காடு உயர்வு

இவ்வாண்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நாளான ஜனவரி 4ஆம் தேதி முதல் டௌன்டவுன் ரயில் பாதையில் பயணம் செய் வோர் எண்ணிக்கை 30% வரை கூடியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார். 'டௌன்டவுன் வழித்தடம் 2: நம்பிக்கையளிக்கும் தொடக்கம்' எனும் தலைப்பிலான தமது வலைப்பதிவில் இதைக் குறிப் பிட்டுள்ள அமைச்சர், அந்த வழித் தடத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும், 20.9 கி.மீ. நீளமும் 12 நிலையங்களையும் கொண்ட டௌன்டவுன் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு சிங்கப்பூரின் இதர ரயில் பாதைகளுக்கும் நன்மை அளித் துள்ளதாக திரு கோ சொன்னார்.

கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் வழக்கமாகச் செல்லும் பயணிகளில் 5 விழுக்காட்டினர் இப்போது டௌன்டவுன் வழித் தடத்தைப் பயன்படுத்துவதாக அவர் சுட்டினார். "இதனால் ஜூரோங் ஈஸ்ட் போன்ற ரயில் நிலையங்களில் நெரிசல் சற்று குறைந்துள்ளது. டௌன்டவுன் வழித்தடம் 2ஐ ஒட்டிச் செல்லும் பேருந்துகளிலும் இப்போது கூட்ட நெரிசலில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!