கராச்சி விமான நிலையத்தில் மோதல்: ஒருவர் சுட்டுக்கொலை, பலர் காயம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களுக்கும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். கராச்சியில் ஜின்னா அனைத்துலக விமான நிலைய நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அனைத் துலக விமான நிறுவன ஊழியர்கள் மீது போலிசாரும் ராணுவ வீரர்களும் கண்ணீர் குண்டுகளை வீசியதாகவும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததாகவும் கூறப்பட்டது.

அந்த மோதலைத் தொடர்ந்து ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் அடைந்ததாகவும் மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். பாகிஸ்தான் அனைத்துலக விமான நிறு வனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவன ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களுக்கும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலைத் தொடர்ந்து ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஊழியருக்கு சக ஊழியர் ஒருவர் உதவுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!